Sunday, November 27, 2011
பனானா நட் ப்ரெட் / Banana Nut Bread
தேவையானவை
கனிந்த வாழைப்பழம் - 3
ப்ரெட் ப்ளொர்/ஆல் பர்ப்பஸ் - 2 கப்
ப்ரொன் சுகர்/ சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/3 தேக்கரண்டி
வால் நட்ஸ் - 1/2 கப்
முட்டை - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/4 கப்
பால் - 1/2 கப்
வெனிலா எஸ்சன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை
வாழைப்பழத்தை தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு முள்கரண்டியால் மசித்து கொள்ளவும்.
இதனுடன் முட்டை,உருக்கிய வெண்ணெய்,வெனிலா எஸ்சன்ஸ்,ப்ரொன் சுகர்,பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ப்ரெட் ப்ளொர்,பேக்கிங் சோடா, உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு சலித்து வைத்துக் கொள்ளவும்.
பின் வாழைப்பழ கலவையுடன் சலித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஒரு மரக்கரண்டியினால் கலந்து கொள்ளவும்.பின் நட்ஸ் சேர்க்கவும்.நட்ஸ் சேர்த்தவுடன் மாவை லேசாக கலக்கவும்.இந்த கலவையை வெண்ணெய் தடவிய ப்ரெட் பேனில் ஊற்றி சிறிது நட்ஸை மேலே தூவி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும்.
ஒரு டூத்பிக்கை ப்ரெட் நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஓட்டக் கூடாது. அது தான் பதம் அப்பொழுது எடுத்து விட வேண்டும்.சுவையான பனனா ப்ரெட் ரெடி.
நான் இங்கே செய்திருப்பது எலக்ட்ரிக் ப்ரெட் மேக்கரில் பேக் செய்யும்முறை.நீங்கள் நார்மல் ஓவனில் இதேமுறையில் பேக் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment