Tuesday, December 27, 2011

மீன் குழம்பு / Fish Gravy



தேவையானவை

மீன் - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1 பல்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிபொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,மிளகாய்பொடி சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் ஒரு கரண்டி அளவு வதங்கியதை எடுத்து மிக்சியில் போட்டு அத்துடன் மல்லிபொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.


நன்கு வதங்கிய தக்காளி,வெங்காயத்துடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா,புளி வாடை அடங்கியவுடன் மீனை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

No comments: