Wednesday, March 14, 2012
நண்டு மசாலா / Crab Masala
தேவையானவை
நண்டு - 7
வெங்காயம் - 1
தக்காளி - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
புளி - சிறிய கோலி அளவு
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மல்லி இலை,கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
செய்முறை
நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,சோம்பு மல்லி இலை,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,கறிமசால தூள் சேர்க்கவும்.
பின் பின் தக்காளி சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் நண்டை சேர்க்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
நன்றாக வெந்து சுருள சுருள கிண்டி கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும்.
Labels:
அசைவம் / Non Vegetarian
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
செய்முறை சாப்பிட தூண்டுகிறது..படங்களும் அருமை.
ராதா ராணி தாங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.
படங்களை பார்த்ததும் நாவூறுது...
மிக்க நன்றி மேனகா.
பார்க்கவே பிரட்டினாற் போல் சூப்பராக இருக்கு.
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.
யாஸ்மின்,
நண்டு மசாலா கலர்ஃபுல்லா சூப்பரா இருக்குங்க.ரசம் சாதத்துக்கு ரொம்ப நல்லாருக்கும்.
சமயங்களில் எனக்கும்கூட இந்த நண்டு கிடைக்கிறது.ஆனால் சுத்தம் செய்ய பயந்து (உயிருடன் இருப்பதால்) வாங்குவதில்லை.
சித்ராசுந்தர், தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
நன்றிங்க...நீங்கள் சொன்னமாதிரி ரசம் சாதத்துக்கு ஏற்ற சைட்டிஸ்.ஆனால் உயிருடன் இருக்கும் நண்டை சுத்தம் செய்யதான் பயம்ன்னு சொன்னேங்க ஆனால் அதுவும் ஈஸிதாங்க.உயிருள்ள நண்டை 20 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு அதன்பின் சுத்தம் செய்தால் எளிதாக இருக்கும்.
அருமையாக செய்து காட்டி இருக்கின்றீர்கள் யாஸ்மின்.
ஸாதிகா,மிக்க நன்றி.செய்து பார்த்து மறக்காம சொல்லுங்க.
வலைச்சரம் பார்த்து வந்தேன். நல்ல சமையல் குறிப்புகள் ! நன்றி சகோதரி !
Email subscription Wideget - உங்கள் தளத்தில் சேர்க்கலாமே ! நன்றி !
Post a Comment