Saturday, March 3, 2012

கேரட் கேக் / Whole Wheat Carrot Cake



தேவையானவை

ஹோல்வீட் ப்ஃளவர் (Whole Wheat) - 2 கப்
துருவிய கேரட் - 2 (2 கப்)
ப்ரெளன் சுகர் - 3/4 கப்
பால் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3/4 கப்
முட்டை - 2
ஜாதிக்காய் பொடி (nutmeg) - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
பட்டை பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி

ப்ராஸ்ட்டிங் செய்ய

வெண்ணெய் - 1/2 கப் (ரூம் டெம்ப்பரேச்சர்)
ஐசிங்சுகர் (பவுடர் சுகர்) - 1/2 கப்
வென்னிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
கோகோனட் பவுடர் - 2 தேக்கரண்டி

செய்முறை

மாவுடன் பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,ஜாதிக்காய் பொடி,பட்டை பொடி,உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ப்ரெளன் சுகர்,முட்டை,எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

பின் பால் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும்.

அந்த கலவையில் சலித்து வைத்திருக்கும் மாவு சேர்த்து அடிக்கவும்.

பின்பு துருவிய கேரட்டை சேர்க்கவும்.

பின் கரண்டியால் மென்மையாக கலக்கவும்.

ஓவனை 350 டிகிரி F முற்சூடு செய்யவும்.ஒரு பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் கேரட் கலவையை அதில் ஊற்றி 350 டிகிரி F 40 நிமிடம் பேக் செய்யவும்.

இடையில் டூத்பிக்கில் குத்திபார்த்தால் மாவு ஒட்டாமல்வரும் அதுதான் பதம் எடுத்து ஆறவிடவும்.

இதனை கட் செய்து அப்படியே சாப்பிடளாம்.விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்தும் சாப்பிடளாம்.


ஒரு பாத்திரத்தில் ரூம் டெம்ப்பரேச்சரில் உள்ள வெண்ணெய், பவுடர்ட் சுகர்,வென்னிலா எசன்ஸ்,கோகோனட் பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

கேக் நன்கு ஆறிய பின் கேக்கின் மேல் இந்த க்ரீமை பூசவும்.

பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து கட் செய்து கொள்ளவும்.

13 comments:

Asiya Omar said...

wow! yummy.

Yasmin said...

thank you

Menaga Sathia said...

உங்க ப்ளாக் ஒம்ப நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்..கேக் சூப்பரா இருக்கு!!

வேர்ட் வெரிபிகேஷைனை எடுத்துடுங்களேன்.

Yasmin said...

மேனகா மிக்க நன்றிங்க.கண்டிப்பா செய்து பாருங்க.

Priya ram said...

கேக் சூப்பர் ரா இருக்கு...

Yasmin said...

ஸாதிகா அக்கா என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.அறுசுவைகளின் அருமையை என்ன அழகாக சொல்லியிருக்கிறேர்கள் அருமை அருமை அருமை..... உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.அனைத்து பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.

Yasmin said...

ப்ரியாராம் வாழ்த்துக்கு நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

Mrs.Mano Saminathan said...

காரட் கேக் செய்யும் விததை அழகான படங்களுடன் சிறப்பாக விளக்கிக் காட்டியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!!

Yasmin said...

மிக்க நன்றி. சுவையும் அருமையா இருக்கும், செய்து பாருங்க.

Vijiskitchencreations said...

yasmin my fist visit here. Wow yummy healthy carrot cake. My favourite. I am going to try soon your style. byw www.vijisvegkitchen.blogspot.com

Yasmin said...

Thanks viji,for your lovely comments!

Jaleela Kamal said...

கேக் உடனே சாப்பிடனும் போல் மிக அருமையாக இருக்கு யாஸ்மீன்

Yasmin said...

தங்களின் வருகைக்கு மிக மிக சந்தோசம்,உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.