Wednesday, December 28, 2011

கார்ன் ஃப்ளார் அல்வா / Corn Flour Halwa



தேவையானவை

கார்ன் ஃப்ளார் - 1 டம்ளர்
நெய் - 1 டம்ளர்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் தூள் - 1 பின்ச்
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
விருப்பமான கலர் - கொஞ்சம்
தண்ணீர் - 2 டம்ளர்

பாகு செய்ய
சர்க்கரை - 4 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை

சர்க்கரையில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைய வைக்கவும்.பாகு வர வேண்டாம்.சர்க்கரை கரைந்தால் மட்டும் போதும்.


ஒரு வாணலியில் கார்ன் ஃப்ளார்1 டம்ளர்,தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கட்டி ஆகாமல் கரைத்து வைக்கவும்.

பின் அத்துடன் நெய் 1 டம்ளர் சேர்த்து அடுப்பில் வைத்து சிறுதீயில் கிளறவும்.

சிறிது சிறிதாக கட்டியாக ஆரம்பிக்கும் கைவிடாமல் கிளறி இந்த பக்குவத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

கிளறிய மாவை சர்க்கரை தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கிளறவும்.

அதனுதுடன் கலர், ஏலக்காய் தூள்,எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி

அல்வா பதம் வந்ததும் பொடியாக உடைத்த முந்திரி சேர்த்து கைவிடாமல் 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

பின் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

சுவையான அல்வா ரெடி.

காளான் 65 / Mushrooms 65



தேவையானவை

பட்டன் காளான் - 100 கிராம்
தயிர் - 1 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி 15 நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான காளான் 65 ரெடி.

Tuesday, December 27, 2011

கம்பு மைசூர் பாக் / Millet Mysore Pak



தேவையானவை

கம்பு மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 1/2 கப்

செய்முறை


ஒரு நாண் ஸ்டிக் கடாயில் நெய் ஊற்றி மாவை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்கவும்.

மைக்ரோவேவில் வெல்லத்தை வைத்து தண்ணீர் விடாமல் உருக்கி கொள்ளவும்.


மாவு நன்றாக வறுத்தவுடன் உருக்கிய வெல்லத்தை சேர்த்து அடுப்பை அனைத்து விட்டு கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறவும்.

இதை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி

சமபடுத்தி துண்டுகள் போடவும்.

சுவையான சூப்பரான கம்பு மைசூர் பாகு ரெடி.

மீன் குழம்பு / Fish Gravy



தேவையானவை

மீன் - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1 பல்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிபொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,மிளகாய்பொடி சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் ஒரு கரண்டி அளவு வதங்கியதை எடுத்து மிக்சியில் போட்டு அத்துடன் மல்லிபொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.


நன்கு வதங்கிய தக்காளி,வெங்காயத்துடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா,புளி வாடை அடங்கியவுடன் மீனை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.

Sunday, November 27, 2011

கோபி 65 / Cauliflower 65



தேவையானவை

காலிஃப்ளவர் - ஒன்று சிறியது
தயிர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி
சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

காலிப்ளவரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த சுடு நீரில் இரண்டு நிமிடம் போட்டு வைக்கவும்.வேறு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது,தயிர்,தந்தூரி மசாலா,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

இத்துடன் காலிஃப்ளவர் சேர்த்து கால்மணி நேரம் ஊற வைக்கவும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு வறுத்து எடுக்கவும்.


சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.

பனானா நட் ப்ரெட் / Banana Nut Bread



தேவையானவை

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3
ப்ரெட் ப்ளொர்/ஆல் ப‌ர்ப்ப‌ஸ் - 2 க‌ப்
ப்ரொன் சுகர்/ ச‌ர்க்க‌ரை - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/3 தேக்க‌ர‌ண்டி
வால் நட்ஸ் - 1/2 க‌ப்
முட்டை - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/4 க‌ப்
பால் - 1/2 கப்
வெனிலா எஸ்சன்ஸ் - ‍ 1 தேக்க‌ர‌ண்டி

செய்முறை

வாழைப்ப‌ழ‌த்தை தோலை உரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு முள்க‌ர‌ண்டியால் ம‌சித்து கொள்ள‌வும்.

இத‌னுட‌ன் முட்டை,உருக்கிய‌ வெண்ணெய்,வெனிலா எஸ்சன்ஸ்,ப்ரொன் சுகர்,பால் சேர்த்து க‌லந்து கொள்ள‌வும்.


ப்ரெட் ப்ளொர்,பேக்கிங் சோடா, உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும்.
பின் வாழைப்பழ க‌ல‌வையுடன் ச‌லித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் க‌லந்து கொள்ள‌வும்.
பின் நட்ஸ் சேர்க்கவும்.
நட்ஸ் சேர்த்தவுடன் மாவை லேசாக கலக்கவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய ப்ரெட் பேனில் ஊற்றி சிறிது நட்ஸை மேலே தூவி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.


ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்து எடுக்கவும்.

ஒரு டூத்பிக்கை ப்ரெட் நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஓட்டக் கூடாது. அது தான் பதம் அப்பொழுது எடுத்து விட வேண்டும்.
சுவையான பனனா ப்ரெட் ரெடி.
நான் இங்கே செய்திருப்பது எலக்ட்ரிக் ப்ரெட் மேக்க‌ரில் பேக் செய்யும்முறை.நீங்கள் நார்மல் ஓவனில் இதேமுறையில் பேக் செய்யலாம்.

சிக்கன் கிரேவி / Chicken Gravy



தேவையானவை

சிக்கன் - அரைக் கிலோ

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்கவும்:

வர மிளகாய் - 4
பட்டை - 2 துண்டு
மல்லி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1/2
தேங்காய் - 1/2 கப்

செய்முறை

கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,வரமிளகாய்,மல்லி,சோம்பு,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சீரகம்,வெந்தயம்,வெந்தயம்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


நண்றாக வதங்கியவுடன் சிக்கன்,உப்பு சேர்த்து

அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி

ஐந்து நிமிடம் வதக்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


தேவைபட்டால் கோழி பாதியளவுக்கு வெந்ததும் உருளைக்கிழங்கு,காலிஃப்ளவர் சேர்த்து கொள்ளவும்.


குழம்பு கொதித்து கோழி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சூடான சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட சூடான சுவையான சிக்கன் கிரேவி ரெடி.