Saturday, February 25, 2012

சல்மன் ஃபிஷ் ஃப்ரை / Salmon Fish Fry



தேவையானவை

சல்மன் மீன் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
லைம் ஜூஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

பின் வெங்காயம்,இஞ்சி,பூண்டு,கொத்தமல்லி,கறிவேப்பிலை இவை அனைத்தையும் பொடியாக வெட்டி ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும்.

அத்துடன் எண்ணெய்,உப்பு,லைம் ஜூஸ்,மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை மீனின் மேற்புறம் தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

பின் நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் இல்லாமல் மசாலா தடவிய பாகத்தை தவாவில் படும்படி போட்டு

அடுப்பை மிதமான தீயில் வைத்து இருபுறமும் வேகவிடவும்.

சுவையான சல்மன் ஃப்ரை ரெடி.

Sunday, February 19, 2012

பால்கோவா / Palgova



தேவையானவை

ரிக்கட்டா சீஸ் (ricotta cheese) - 14 oz
பட்டர் - 4 டேபுள் ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பால் பவுடர் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 பின்ச்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.


ஒரு கடாயில் பட்டரை போட்டு லேசாக உருக்கியவுடன்

ரிக்கட்டா சீஸ்,சர்க்கரை சேர்த்து

ஒரு கரண்டியால் கட்டி இல்லாமல் கிளறவும்.

பின் கொதிக்க ஆரம்பித்தவுடன் கை விடாமல் 15 நிமிடம் கிளறவும்.

முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.

பிறகு கொஞ்சம் கெட்டியாக ஆனவுடன் பால் பவுடர் சேர்த்து

நன்றாக கலந்து மீண்டும் ஒரு 10 நிமிடம் கிளறவும்.

கடைசியில் ஏலக்காய் பொடிதூவி

பாத்திரத்தில் ஒட்டாமல் பால்கோவ பதம் வந்ததும் இறக்கவும்.

இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.

ரஸ்க் / Rusk



இந்த ரெசிபியை Showmethecurry.com-ல் பார்த்து செய்தது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

தேவையானவை

ஹம் பர்கர் பன் - 1 டசன்
ஆயில் ஸ்ப்ரெய் (அ) ஆயில் - தேவைக்கு
சர்க்கரை - 2 ஸ்பூன்

செய்முறை

பர்கர் பன்னை மேலே நடுவில் இரண்டாக வெட்டவும்.

வெட்டிய பன்னில் ஆயில் ஸ்ப்ரெய் அல்லது ஆயில் தடவவும்.

பின் சர்க்கரையை ஒரு பின்ச் வீதம் ஒவ்வொரு பன்னிலும் தூவி 270 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 1 மணி நேரம் வைத்து

கோல்டன் ப்ரொவுனானதும் எடுக்கவும்.

சுவையான மாலை நேர டீ ரஸ்க் ரெடி.

Sunday, February 12, 2012

பனீர் டிக்கா மசாலா / Paneer Tikka Masala



தேவையானவை

பனீர் - 1 கப் ( பொரித்தது )
பெரிய வெங்காயம் - 1 ( விழுதாக )
தக்காளி - 2 ( விழுதாக )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டாணி - சிறிது
கசூரி மேத்தி பவுடர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
பால் - 1 1/2 கப்
சீனி - 1 /4 ஸ்பூன்
சாய் சீரா - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை

வாணலியில் 3 தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சாய் சீரா மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து தாளிக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.அதனுடன் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் தந்தூரி மசாலா பவுடர் சேர்த்து வதக்கி,

தக்காளி விழுது,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியவுடன் பட்டாணி சேர்த்து கிளறவும்.

பின் பால் 1 1/2 கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் பனீர் துண்டுகளை போட்டு வேகவிடவும்.

சிறிது வெந்தவுடன் 1/4 ஸ்பூன் சீனி சேர்க்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்தவுடன் கசூரி மேத்தி பவுடர் தூவி இறக்கவும்.

நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான சைட் டிஷ்.

சாக்லெட் பர்ஃபி / Chocolate Burfi



தேவையானவை

கோக்கோ பவுடர் - 1/3 கப்
பால் பவுடர் - 1 கப்
கண்டெண்ஸ்ட் மில்க் - 1 டின்
வெண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு கரைந்ததும்

கண்டெண்ஸ்ட் மில்க்,பால் பவுடர்,கோக்கோ பவுடர் மூன்றையும் சேர்த்து

நன்றாக கை எடுக்காமல் கிளறவும்.

ஒரு பத்து நிமிடம் கழித்து நன்கு சுருண்டு வரும் பதம் வரை கிளறவும்.

நன்கு கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து ஒரு நெய் தடவிய தட்டில் இந்த கலவையை கொட்டி

பின் சமநிலை செய்து துண்டுகளாக்கி பாதாம் வைத்து அழகுபடுத்தவும்.

சுவையான சாக்லெட் பர்ஃபி ரெடி.இது எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

மாசி சம்பல் / Maasi Sambal



தேவையானவை

மாசித்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பெரிய வெங்காயம் - பாதி
தேங்காய்துருவல் - 2 தேக்கரண்டி
லெமன் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
மிளகாய் வற்றல் போட்டு

அத்துடன் பொடியாக்கிய மாசி கருவாட்டை சேர்த்து வதக்கவும்.

சிவக்க வதக்கியவுடன் தேங்காய்துருவல் சேர்த்து

பொன்முறுகலாக வறுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.

சிறிது ஆறியவுடன் உரலில் அல்லது மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

கடைசியில் வெங்காயம் சேர்த்து இடித்து வைக்கவும்.

விருப்பபட்டால் லெமன் சாறு சேர்த்து கிளறி விட்டு சாப்பிடலாம்.சுவையான மாசி சம்பல் ரெடி.