Sunday, November 27, 2011

கோபி 65 / Cauliflower 65



தேவையானவை

காலிஃப்ளவர் - ஒன்று சிறியது
தயிர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா - 1 தேக்கரண்டி
சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

காலிப்ளவரை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த சுடு நீரில் இரண்டு நிமிடம் போட்டு வைக்கவும்.வேறு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது,தயிர்,தந்தூரி மசாலா,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

இத்துடன் காலிஃப்ளவர் சேர்த்து கால்மணி நேரம் ஊற வைக்கவும்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு வறுத்து எடுக்கவும்.


சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.

பனானா நட் ப்ரெட் / Banana Nut Bread



தேவையானவை

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3
ப்ரெட் ப்ளொர்/ஆல் ப‌ர்ப்ப‌ஸ் - 2 க‌ப்
ப்ரொன் சுகர்/ ச‌ர்க்க‌ரை - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/3 தேக்க‌ர‌ண்டி
வால் நட்ஸ் - 1/2 க‌ப்
முட்டை - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/4 க‌ப்
பால் - 1/2 கப்
வெனிலா எஸ்சன்ஸ் - ‍ 1 தேக்க‌ர‌ண்டி

செய்முறை

வாழைப்ப‌ழ‌த்தை தோலை உரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு முள்க‌ர‌ண்டியால் ம‌சித்து கொள்ள‌வும்.

இத‌னுட‌ன் முட்டை,உருக்கிய‌ வெண்ணெய்,வெனிலா எஸ்சன்ஸ்,ப்ரொன் சுகர்,பால் சேர்த்து க‌லந்து கொள்ள‌வும்.


ப்ரெட் ப்ளொர்,பேக்கிங் சோடா, உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும்.
பின் வாழைப்பழ க‌ல‌வையுடன் ச‌லித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் க‌லந்து கொள்ள‌வும்.
பின் நட்ஸ் சேர்க்கவும்.
நட்ஸ் சேர்த்தவுடன் மாவை லேசாக கலக்கவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய ப்ரெட் பேனில் ஊற்றி சிறிது நட்ஸை மேலே தூவி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.


ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்து எடுக்கவும்.

ஒரு டூத்பிக்கை ப்ரெட் நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஓட்டக் கூடாது. அது தான் பதம் அப்பொழுது எடுத்து விட வேண்டும்.
சுவையான பனனா ப்ரெட் ரெடி.
நான் இங்கே செய்திருப்பது எலக்ட்ரிக் ப்ரெட் மேக்க‌ரில் பேக் செய்யும்முறை.நீங்கள் நார்மல் ஓவனில் இதேமுறையில் பேக் செய்யலாம்.

சிக்கன் கிரேவி / Chicken Gravy



தேவையானவை

சிக்கன் - அரைக் கிலோ

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்கவும்:

வர மிளகாய் - 4
பட்டை - 2 துண்டு
மல்லி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1/2
தேங்காய் - 1/2 கப்

செய்முறை

கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,வரமிளகாய்,மல்லி,சோம்பு,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சீரகம்,வெந்தயம்,வெந்தயம்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


நண்றாக வதங்கியவுடன் சிக்கன்,உப்பு சேர்த்து

அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி

ஐந்து நிமிடம் வதக்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


தேவைபட்டால் கோழி பாதியளவுக்கு வெந்ததும் உருளைக்கிழங்கு,காலிஃப்ளவர் சேர்த்து கொள்ளவும்.


குழம்பு கொதித்து கோழி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சூடான சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட சூடான சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

Friday, November 25, 2011

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala



தேவையானவை

எலும்பில்லா சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
முட்டை வெள்ளைகரு - 1
எண்ணெய் - பொரிக்க
சிக்கன் 65 மசால (அ) மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
மிளகுசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1/2
குடைமிளகாய் - 1/2

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர்,இஞ்சி பூண்டு விழுது,ரெட் கலர்,உப்பு,கார்ன் ஃப்ளார்,முட்டை வெள்ளைகரு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.


கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் விட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக இருபுறமும் வறுத்து எடுக்கவும்.

குறைந்தது 15 நிமிடத்தில் சிக்கன் வெந்துவிடும்.
அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.


மற்றொரு பாத்திரத்தில் தயிர், ரெட் கலர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்.


பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து

கரைத்து வைத்துள்ள தயிர் கலவையினை சேர்க்கவும்.


பின்னர் வறுத்து வைத்த சிக்கன்

,வதக்கின வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து

5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
சுவையான ஹைதராபாத் சிக்கன் 65 ரெடி.

Sunday, November 6, 2011

வேர்கடலை சிக்கி / Peanut chikki



தேவையானவை

வேர்கடலை - ஒரு கப்
சர்க்கரை - 3/4 கப்

செய்முறை

வேர்கடலையை வறுத்து தோல் எடுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் சர்க்கரையை சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.
முதலில் சர்க்கரை கட்டிகளாக மாறும்.

கரண்டியால் கைவிடாமல் கிளறவும்.பின் சர்க்கரை பொன்னிறமாக முழுதும் கரைந்ததும்,

வேர்க்கடலை பொடியை போட்டு கலந்து

உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி நெய் தடவிய சப்பாத்தி கடையால் தேய்த்து

உடனே துண்டுகள் போடவும்.


மொறுமொறுப்பான சுவையான வேர்கடலை சிக்கி தயார்.

குழிப்பணியாரம் / Kuli Paniyaram



தேவையானவை

இட்லி மாவு - ஒரு கப்
ஏலக்காய் - 1 (விதை மட்டும்)
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 1/3 கப்
ஆப்பசோடா - சிறிது
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.மைக்ரோஒவனிலும் ஒரு நிமிடம் வைத்தும் செய்யலாம்.
இறக்கி வைத்து வடிகட்டி மாவில் ஊற்றி அதனுடன் தேங்காய் துருவல்,பொடித்த ஏலக்காய், ஆப்பசோடா, சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும்.

சிவந்து வெந்ததும் எடுக்கவும்.


சூடான சுவையான குழிப்பணியாரம் ரெடி.

Saturday, November 5, 2011

பாதுஷா / Badusha



தேவையானவை

மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
தயிர் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய

சர்க்கரை - 1 1/4 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

மைதா மாவுடன் உப்பு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கி வெண்ணெய் சேர்த்து பிசைந்து பின் தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


அரை மணி நேரம் மாவை மூடி வைக்கவும்.இதனிடையில் சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி இறக்கும்பொழுது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்..

மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓரங்களை விரள்கலால் மடித்து
பாதுஷா போல் செய்து கொள்ளவும்.

எண்ணெயை சூடானதும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.பின் பாதுஷாக்களை எண்ணெயில் போடவும்.வெண்ணிறமாய் பாதுஷாக்கள் மேலே வந்து மிதக்க ஆரம்பித்த பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.

பொன்னிறமாக பொரித்து எடுத்து,ஆறிய பின் பாகில் போடவும்.


2 நிமிடம் ஊறிய பின் எடுத்து, பரிமாறவும்.