Showing posts with label சட்னி / chutney. Show all posts
Showing posts with label சட்னி / chutney. Show all posts
Saturday, June 11, 2011
கார்லிக் சாஸ் / Garlic Sauce
தேவையானவை
முழு பூண்டு - 3
லெமன் ஜுஸ் - 1/2 கப்
ஆலீவ் ஒயில் (அ) வெஜிடபிள் ஒயில் - 1 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை
மிக்ஸியில் தோல் உரித்த பூண்டு,லெமன் ஜுஸ்,உப்பு சேர்த்து அரைக்கவும்.
சிறிது அரைந்ததும் எண்ணெய் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை மைபோல் அரைத்து எடுக்கவும்.
இதனை குப்பூஸ்,பிரெட் வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஃப்ரிஜில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்களாம்.
ஃப்ரீசரில் (freezer) வைத்தாலும் இலகுவாக இருக்கும்.
Sunday, May 15, 2011
ஹமூஸ் / Hummus
தேவையானவை
வேகவைத்த கொண்டை கடலை - 1 கப்
லெமன் - ஒன்று
பூண்டு - 3 பல்
வெங்காயம் - பாதி
தஹினி ஸாஸ் அல்லது வெள்ளை எள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
மிக்சியில் கொண்டைகடலை,பூண்டு,லெமன் ஜூஸ்,வெங்காயம்,உப்பு,தஹினா ஸாஸ்,ஆலிவ் ஆயில் ஒரு தேக்கரண்டி,பப்பரிக்கா பவுடர் சிறிது சேர்த்து
கடலை வெந்த தண்ணீர் கலந்து மிக்சியில் அரைக்கவும்.
கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
மேலே மீதியிருக்கும் ஆலிவ் ஆயில் கலந்து
பப்பரிக்கா பவுடர்,நறுக்கின பாதம் பருப்பு சேர்த்து அலங்கரிக்கவும்.
சுவையான ஹமூஸ் ரெடி.
Friday, April 1, 2011
பூண்டு சட்னி / Garlic Chutney
தேவையானவை
பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 4
புளி - அரை நெல்லிக்காய் அளவு
நல்லஎண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - பாதி
செய்முறை
முதலில் ஒருகடாயை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் பூண்டு சேர்த்து பூண்டு சற்று சிவக்கும் வரை வதக்கவும்.பிறகு அதில் வெங்காயம்,புளி,காய்ந்தமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.சற்று ஆறவிட்டு மை போல அரைத்து கொள்ளவும்.
இது இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
பூண்டு - 15 பல்
காய்ந்த மிளகாய் - 4
புளி - அரை நெல்லிக்காய் அளவு
நல்லஎண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - பாதி
செய்முறை
முதலில் ஒருகடாயை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் பூண்டு சேர்த்து பூண்டு சற்று சிவக்கும் வரை வதக்கவும்.பிறகு அதில் வெங்காயம்,புளி,காய்ந்தமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.சற்று ஆறவிட்டு மை போல அரைத்து கொள்ளவும்.
இது இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)






