Showing posts with label பஜ்ஜி வடை / Bajji Vadas. Show all posts
Showing posts with label பஜ்ஜி வடை / Bajji Vadas. Show all posts
Sunday, January 29, 2012
ஸ்டப்பிங் மிளகாய் பஜ்ஜி / Stuffed Milagai Bajji
தேவையானவை
பஜ்ஜி மிளகாய் - 5
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
சில்லி பவுடர் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஸ்டப்பிங் செய்ய:
பிடித்தமான உருளைகிழங்கு மசாலா - தேவையான அளவு
செய்முறை
மிளகாயை காம்பிலிருந்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.பின் கடலை மாவு,அரிசி மாவு,உப்பு,சில்லி பவுடர்,சோடா உப்பு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடம் வைக்கவும்.
விதை நீக்கிய மிளகாயின் உள்ளே ஒரு தேக்கரண்டி உருளைகிழங்கு மசாலா வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெயை காயவைத்து கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் மிளகாயை முக்கி பொரித்தெடுத்து மேலே சாட் மசலா தூவி பரிமாறவும்.
சுவையான ஸ்டப்பிங் மிளகாய் பஜ்ஜி ரெடி.
Saturday, January 14, 2012
க்ரிஸ்பி ஆனியன் பக்கோடா / Crispy Onion Pakoda
தேவையானவை
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
நறுக்கிய இஞ்சி - சிறிது
பெருங்காயம் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கறிபொடி - 1/4 தேக்கரண்டி
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,பெருங்காயம்,மிளகாய் தூள்,கறிபொடி,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இத்துடன் கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான க்ரிஸ்பி ஆனியன் பக்கோடா ரெடி.
Wednesday, April 6, 2011
முட்டை போண்டா / Egg Bonda
தேவையானவை
முட்டை - 4
வெங்காயம் - 1/2 (பொடியாக அரிந்தது)
ப.மிளகாய் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மல்லி இலை - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
பூண்டு - 3
சோம்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முட்டைகளை வேக வைத்து,மேல் ஓட்டை நீக்கி இரண்டாக வெட்டி மஞ்சள் கருக்களை தனியாக எடுத்து பொடியாக நறுக்கவும்.
பிறகு பொடியாக அரிந்த வெங்காயம்,மிளகாய்,அரைத்த விழுது,மல்லி இலை,அரிந்த மஞ்சள் கரு,உப்பு சேர்த்து கலந்து வெள்ளைக்கருவின் குழிகளில் நிரப்பவும்.
சோம்பு,பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கடலைமாவு,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கலந்து கெட்டியாக கரைக்கவும்.
எண்ணெயை சூடாக்கி தயாரித்து வைத்த முட்டைகளை கவனமாக மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Thursday, March 31, 2011
பஜ்ஜி / Bajji
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
சோட உப்பு - 1 சிட்டிகை
பூண்டு - 1 பல் நசுக்கியது
உப்பு - தேவையான அளவு
வாழைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
எண்னெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசி மாவு,சோட உப்பு,மிளகாய் தூள்,சோம்பு தூள்,பூண்டு,உப்பு சிறிது கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.அதில் வாழைக்காய்,உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
சோட உப்பு - 1 சிட்டிகை
பூண்டு - 1 பல் நசுக்கியது
உப்பு - தேவையான அளவு
வாழைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
எண்னெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசி மாவு,சோட உப்பு,மிளகாய் தூள்,சோம்பு தூள்,பூண்டு,உப்பு சிறிது கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.அதில் வாழைக்காய்,உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
Subscribe to:
Posts (Atom)











