Thursday, March 31, 2011

பஜ்ஜி / Bajji

கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (காரத்திற்கேற்ப)
சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
சோட உப்பு - 1 சிட்டிகை
பூண்டு - 1 பல் நசுக்கியது
உப்பு - தேவையான அளவு
வாழைக்காய் - 1
உருளைக்கிழங்கு - 1
எண்னெய் - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசி மாவு,சோட உப்பு,மிளகாய் தூள்,சோம்பு தூள்,பூண்டு,உப்பு சிறிது கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.அதில் வாழைக்காய்,உருளைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.



ஹெல்த்தி பார் / Healthy Bars

தேவையானவை

1. டேட்ஸ் - 3/4 கப் பொடியாக நறுக்கியது
2. பாதாம் பருப்பு - 1 கப்
3. தேன் - 2 மேஜைக்கரண்டி
4. எள் - 1 மேஜைக்கரண்டி வறுத்து

செய்முறை

பாதாம் பருப்பை லேசாக வெரும் காடயில் வறுக்கவும்.

மிக்சியில் பாதாம் பருப்பை ஒன்றுஇரண்டாக பொடிக்கவும்.

அத்துடன் எள்ளையும் பொடிக்கவும்,பின் டேட்ஸ்,தேன் சேர்த்து
மிக்சியில் கரகரப்பாக பொடிக்கவும்.

தாம்பாளத்தில் கொட்டி பின்பு துண்டுகள் போடவும்.


இந்த காம்பினேஷன் சுவை சூப்பராக இருக்கும் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.