Sunday, January 29, 2012

கறி தோசை / Kari Dosa



தேவையானவை

தோசை மாவு - 1 கப்
முட்டை - 2

கறி மசாலா செய்ய:

சிக்கன் (அ) மட்டன் கீமா - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விலுது - 1 ஒரு தேக்கரண்டி
மிளகாய் பொடி- 1/2 தேக்கரண்டி
கறி மசாலா பொடி- 1/4 தேக்கரண்டி
சீரகபொடி - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
சோம்பு - 1/4 தேக்கரண்டி
பட்டை - 1

சிக்கன் மசாலா செய்ய:

சிக்கன் கீமாவை கழுவி தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு,பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் பொடி,சீரகபொடி,கறி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.

பின்னர் சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.

தண்ணீர் வத்தியதும் நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.


பின்பு ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள சிக்கன் மசாலாவை பரவளாக போட்டு

முட்டையை ஊற்றி திருப்பிபோட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


கறி தோசை ரெடி.இதனை சட்னி, சாம்பாருடன் சாப்பிடலாம்.

ஸ்டப்பிங் மிளகாய் பஜ்ஜி / Stuffed Milagai Bajji



தேவையானவை

பஜ்ஜி மிளகாய் - 5
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
சில்லி பவுடர் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சோடா உப்பு - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிப்பதற்கு

ஸ்டப்பிங் செய்ய:
பிடித்தமான உருளைகிழங்கு மசாலா - தேவையான அளவு

செய்முறை

மிளகாயை காம்பிலிருந்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.பின் கடலை மாவு,அரிசி மாவு,உப்பு,சில்லி பவுடர்,சோடா உப்பு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 15 நிமிடம் வைக்கவும்.

விதை நீக்கிய மிளகாயின் உள்ளே ஒரு தேக்கரண்டி உருளைகிழங்கு மசாலா வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெயை காயவைத்து கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் மிளகாயை முக்கி பொரித்தெடுத்து மேலே சாட் மசலா தூவி பரிமாறவும்.
சுவையான ஸ்டப்பிங் மிளகாய் பஜ்ஜி ரெடி.

Saturday, January 14, 2012

க்ரிஸ்பி ஆனியன் பக்கோடா / Crispy Onion Pakoda



தேவையானவை

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
நறுக்கிய இஞ்சி - சிறிது
பெருங்காயம் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கறிபொடி - 1/4 தேக்கரண்டி
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை,பெருங்காயம்,மிளகாய் தூள்,கறிபொடி,பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.இத்துடன் கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான க்ரிஸ்பி ஆனியன் பக்கோடா ரெடி.

ரசமலாய் / Rasmalai



தேவையானவை

ரசகுல்லா - 1 டின்
பால் - 4 கப்
கண்டெண்ஸ்ட் மில்க் - 1 டின்
ஏலக்காய் - 4
பிஸ்தா,பாதாம்,முந்திரி - தலா 10
குங்குமப்பூ - தேவையான அளவு

செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். நடு நடுவே கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்து விடும்.


பால் கொஞ்சம் சுண்ட ஆரம்பித்ததும் குங்குமப்பூ,இனிப்பு தேவையான அளவு கண்டெண்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்கவிடவும்.


மிக்சியில் பிஸ்தா,பாதாம்,முந்திரி,ஏலக்காய் சேர்த்து

பொடித்து கொதிக்கும் பாலில் சேர்த்து வாசம் போகும்வரை கொதிக்கவிடவும்.

ரசகுல்லாவை ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீர் வடியவிடவும்.

தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் ஒவ்வொன்றாக கையில் எடுத்து சிறிதளவு பிழிந்து விட்டு கொதிக்கும் பாலில் ரசகுல்லாவை போட்டு ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடம் கழித்து நன்கு வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து ப்ரிஜில குளிரவைத்து சில்லென்று பரிமாறவும். சுவையான ரசமலாய் தயார்.