Monday, May 30, 2011

மைக்ரோவேவ் பால்கோவா / Microwave Palgova



தேவையானவை

பட்டர் (அ) நெய் - 3 தேக்கரண்டி
பால்பவுடர் (Non Fat Dry Milk Powder) - 1 3/4 கப்
மில்க் மெய்டு - 1 டின்

செய்முறை

மைக்ரோவேவில் வைத்து சமைக்கக்கூடிய பாத்திரத்தில் மேலே சொன்ன மூன்று பொருட்களையும் போட்டு ஒரு கரண்டியால நன்றாக கலக்கவும்.


இந்த கலவையை மைக்ரோவேவில் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.ஒவ்வொரு ஒரு நிமிடங்களுக்கு ஒரு முறை இடையில் கிளறி விடவும்.


பிறகு வெளியே எடுத்து கரண்டி கொண்டு நன்றாக கலக்கி மேலும் 1 நிமிடம் வைக்கவும்.

பிறகு மீன்டும் ஒரு முறை வெளியே எடுத்து நன்றாக கலக்கி 1 நிமிடம் வைக்கவும்.

சுவையான பால்கோவா 5 நிமிடங்களில் ரெடி

Sunday, May 15, 2011

குலோப் ஜாமுன் / Gulab Jamun



தேவையானவை
ஸ்விட் லெஸ் கோவா - 250 கிராம் (KHOA/MAWA)
மைதா மாவு - 1/2 கப் அல்லது தேவைக்கு
பேக்கிங் ப‌வுட‌ர் - 2 பின்ஞ்
தயிர் - 1/4 கப்

ச‌ர்க்க‌ரை பாகு செய்ய

ச‌ர்க்க‌ரை = 2 கப்
த‌ண்ணீர் தேவையான அள‌வு
க‌ல‌ர் - சிறிது

செய்முறை
கோவா,மைதா,பேக்கிங் பவுடர்,தயிர்,மைதாமவு சேர்த்து மெதுவாக பிசைந்து சின்ன உருண்டைகளாக வேண்டிய வடிவில் உருட்டி வைக்கவும்.


சர்க்க‌ரையில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் மிதமான சூட்டில் போட்டு பொரித்தெடுகவும்.


பின்பு சர்க்கரை பாகில் போடவும்.


இந்த முறையில் குலோப் ஜாமுன் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

ஹமூஸ் / Hummus



தேவையானவை

வேகவைத்த கொண்டை கடலை - 1 கப்
லெமன் - ஒன்று
பூண்டு - 3 பல்
வெங்காயம் - பாதி
தஹினி ஸாஸ் அல்லது வெள்ளை எள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை

மிக்சியில் கொண்டைகடலை,பூண்டு,லெமன் ஜூஸ்,வெங்காயம்,உப்பு,தஹினா ஸாஸ்,ஆலிவ் ஆயில் ஒரு தேக்கரண்டி,பப்பரிக்கா பவுடர் சிறிது சேர்த்து
கடலை வெந்த தண்ணீர் கலந்து மிக்சியில் அரைக்கவும்.


கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
மேலே மீதியிருக்கும் ஆலிவ் ஆயில் கலந்து
பப்பரிக்கா பவுடர்,நறுக்கின பாதம் பருப்பு சேர்த்து அலங்கரிக்கவும்.


சுவையான ஹமூஸ் ரெடி.

பிட்டா பிரெட் / Pita Bread



தேவையானவை
மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 2 கப்
சீனி - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1 1/2 ஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை

மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சீனியை போட்டு 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
மாவுடன் உப்பு,எண்ணெய் 1 தேக்கரண்டி கலந்து
அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 1 அல்லது 2 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.


இப்பொழுது மாவு இரு மடங்காக இருக்கும்.

பின் உருண்டைகளாக மாவை உருட்டவும்.

அதனை சப்பாத்தி கட்டையால் தேய்த்து வைக்கவும்.


முற்சூடு செய்த அவனில் 400 டிகிரியில் 3 நிமிடம் வைத்து

ஒருசைடு வெந்ததும் அடுத்தசைடும் வைத்து இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும்.


இதற்க்கு தொட்டு கொள்ள ஹமூஸ் நன்றாக இருக்கும்.

Monday, May 2, 2011

ஜீரா பூரி / Sweet Poori



தேவையானவை

மைதா மாவு - 2 கப்
சோடா மாவு - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 1/4 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்

ஜீரா செய்ய தேவையானவை

சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
கலர் - சிறிது


செய்முறை

முதலில் மைதாவில் ,உப்பு,சர்க்கரை,சோடா மாவு கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து இரண்டு மணி நேரம் ஊரவைக்கவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான பூரியாக தேய்க்கவும்.


தேய்த்த பூரிகளை படத்தில் உள்ளது போல் குறுக்கே சின்னதாக வெட்டவும்.




பின் அதனை பாதியாக மடிக்கவும்.

அதேபோல் அடுத்த பகுதியும் மடித்து
இரண்டையும் ஒன்று சேர்க்கவும்.

சப்பாத்தி கட்டையில் வைத்து முக்கோனமாக தேய்க்கவும்.


ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு இருபுறமும் வேகவிட்டு சிவக்க விடாமல் எடுக்கவும்.


பிறகு பொரித்த எடுத்த பூரிகளை செய்து வைத்திருக்கும் ஜீராவில் போட்டு

எடுத்து வைக்கவும்.

சுவையான ஜீரா பூரி தயார்.