Showing posts with label பிரெட் / Bread. Show all posts
Showing posts with label பிரெட் / Bread. Show all posts

Saturday, March 31, 2012

லெபனீஸ் சீஸ் பை / Lebanese Cheese Pie




தேவையானவை

மைதா மாவு - 4 கப் (all purpose flour)
பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 1 1/2 கப்
சீனி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
ஆயில் - 1/2 கப்

ஸ்டப்பிங் செய்ய:

கட் செய்த மொற்சரில்லா சீஸ் (mozzarella cheese)
ஃபிட்ட சீஸ் (feta cheese)
கொத்தமல்லி - சிறிது

செய்முறை

மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.மாவுடன் உப்பு,சீனி,பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின் அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி அத்துடன் ஆயில் சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 4 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் கட் செய்த மொற்சரில்லா சீஸ்,உதிர்த்த ஃபிட்ட சீஸ்,பொடியாக வெட்டிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பின் மாவை நான்கில் ஒரு பங்கை எடுத்து உருட்டி அதனை சிறிது தடினமாக சப்பாத்தி கட்டையால் பெரிதாக தேய்த்து,அதன்பின் தேய்த்த மாவின் மேல் ஒரு மூடியை வைத்து கத்தியால் ரவுன்டாக வெட்டி கொள்ளவும்.

மாவின் நடுவில் கால் டீஸ்பூன் ஆயில் விடவும்.

அதன்மேல் ஒரு தேக்கரண்டி சீஸ் கலவையை வைத்து,சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஓரம் முழுவதும் தடவும்.

பின் படத்தில் இருப்பது போல் இருபுறமும் மடக்கிவிடவும்.

அதேபோல் அடுத்தபுறமும் மடக்கிவிட்டால் இதுமாதிரி சதுரவடிவில் பைபோல் கிடைக்கும்.

பின்னர் அதனை ஆயில் தடவிய ட்ரேயில் வைத்து 325 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 15 அல்லது 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான ஸ்டப்டு சீஸ் பை ரெடி.

இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லன்ஞ்க்கு ஏற்றது.

ப்ரிஜரில் வைத்து வேண்டும்பொழுது மைக்ரோ ஓவனில் சூடு செய்தும் கொடுக்களாம்.மிகவும் சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதில் பேக்கிங் பவுடர் சேர்த்து இருப்பதால் சீக்கிரமாக கீழ்பகுதி கறுகிபோய்விடும்.அதனால் அவ்வபொழுது கீழே கறுகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

Sunday, February 19, 2012

ரஸ்க் / Rusk



இந்த ரெசிபியை Showmethecurry.com-ல் பார்த்து செய்தது.நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

தேவையானவை

ஹம் பர்கர் பன் - 1 டசன்
ஆயில் ஸ்ப்ரெய் (அ) ஆயில் - தேவைக்கு
சர்க்கரை - 2 ஸ்பூன்

செய்முறை

பர்கர் பன்னை மேலே நடுவில் இரண்டாக வெட்டவும்.

வெட்டிய பன்னில் ஆயில் ஸ்ப்ரெய் அல்லது ஆயில் தடவவும்.

பின் சர்க்கரையை ஒரு பின்ச் வீதம் ஒவ்வொரு பன்னிலும் தூவி 270 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 1 மணி நேரம் வைத்து

கோல்டன் ப்ரொவுனானதும் எடுக்கவும்.

சுவையான மாலை நேர டீ ரஸ்க் ரெடி.

Sunday, November 27, 2011

பனானா நட் ப்ரெட் / Banana Nut Bread



தேவையானவை

கனிந்த‌‌ வாழைப்ப‌ழ‌ம் - ‍ 3
ப்ரெட் ப்ளொர்/ஆல் ப‌ர்ப்ப‌ஸ் - 2 க‌ப்
ப்ரொன் சுகர்/ ச‌ர்க்க‌ரை - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1/3 தேக்க‌ர‌ண்டி
வால் நட்ஸ் - 1/2 க‌ப்
முட்டை - 1
உப்பு - 1/4 ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1/4 க‌ப்
பால் - 1/2 கப்
வெனிலா எஸ்சன்ஸ் - ‍ 1 தேக்க‌ர‌ண்டி

செய்முறை

வாழைப்ப‌ழ‌த்தை தோலை உரித்து ஒரு பாத்திர‌த்தில் போட்டு முள்க‌ர‌ண்டியால் ம‌சித்து கொள்ள‌வும்.

இத‌னுட‌ன் முட்டை,உருக்கிய‌ வெண்ணெய்,வெனிலா எஸ்சன்ஸ்,ப்ரொன் சுகர்,பால் சேர்த்து க‌லந்து கொள்ள‌வும்.


ப்ரெட் ப்ளொர்,பேக்கிங் சோடா, உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு ச‌லித்து வைத்துக் கொள்ள‌வும்.
பின் வாழைப்பழ க‌ல‌வையுடன் ச‌லித்து வைத்திருக்கும் மாவை சேர்த்து ஒரு ம‌ர‌க்க‌ர‌ண்டியினால் க‌லந்து கொள்ள‌வும்.
பின் நட்ஸ் சேர்க்கவும்.
நட்ஸ் சேர்த்தவுடன் மாவை லேசாக கலக்கவும்.
இந்த கலவையை வெண்ணெய் தடவிய ப்ரெட் பேனில் ஊற்றி சிறிது நட்ஸை மேலே தூவி 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைக்கவும்.


ஒரு ம‌ணி நேர‌ம் பேக் செய்து எடுக்கவும்.

ஒரு டூத்பிக்கை ப்ரெட் நடுவில் குத்தி பார்த்தால் மாவு ஓட்டக் கூடாது. அது தான் பதம் அப்பொழுது எடுத்து விட வேண்டும்.
சுவையான பனனா ப்ரெட் ரெடி.
நான் இங்கே செய்திருப்பது எலக்ட்ரிக் ப்ரெட் மேக்க‌ரில் பேக் செய்யும்முறை.நீங்கள் நார்மல் ஓவனில் இதேமுறையில் பேக் செய்யலாம்.

Saturday, June 11, 2011

சிப்பட்டா ப்ரெட் / Ciabatta Bread



தேவையானவை

unbleached மைதா (அ) ப்ரெட் ப்ளொர் - 4 கப்
ஆலீவ் ஒயில் (அ) வெஜிடபிள் ஒயில் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 (அ) 2 1/2 கப்
சீனி - 1/2 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1/4 ஸ்பூன்

செய்முறை

மாவுடன் உப்பு,ஒயில் 2 மேசைக்கரண்டி,சீனி,ஈஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும்.


பின் அதில் தண்ணீர் கலந்து சிறிது இலகுவாக கரண்டியால் பிசைந்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 8 அல்லது 10 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.
இப்பொழுது மாவு இரு மடங்காக பொங்கி இருக்கும்.

இந்த மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை மென்மையாக பிசைந்துக் கொள்ளவும்.


பின் பிசைந்த மாவை எடுத்து சிறிது மாவு சேர்த்து முற்சூடுப்படுத்திய அவனில் 400 F 20 - 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.


சுவையான சிப்பட்டா ப்ரெட் ரெடி.

இதற்க்கு கார்லிக் சாஸ்,ஒலிவ் ஒயில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Sunday, May 15, 2011

பிட்டா பிரெட் / Pita Bread



தேவையானவை
மைதா மாவு - 2 கப்
கோதுமை மாவு - 2 கப்
சீனி - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1 1/2 ஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை

மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சீனியை போட்டு 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.
மாவுடன் உப்பு,எண்ணெய் 1 தேக்கரண்டி கலந்து
அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 1 அல்லது 2 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.


இப்பொழுது மாவு இரு மடங்காக இருக்கும்.

பின் உருண்டைகளாக மாவை உருட்டவும்.

அதனை சப்பாத்தி கட்டையால் தேய்த்து வைக்கவும்.


முற்சூடு செய்த அவனில் 400 டிகிரியில் 3 நிமிடம் வைத்து

ஒருசைடு வெந்ததும் அடுத்தசைடும் வைத்து இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும்.


இதற்க்கு தொட்டு கொள்ள ஹமூஸ் நன்றாக இருக்கும்.