Saturday, March 31, 2012

லெபனீஸ் சீஸ் பை / Lebanese Cheese Pie




தேவையானவை

மைதா மாவு - 4 கப் (all purpose flour)
பேக்கிங் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
மிதமான சூடுள்ள தண்ணீர் - 1 1/2 கப்
சீனி - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
ஆயில் - 1/2 கப்

ஸ்டப்பிங் செய்ய:

கட் செய்த மொற்சரில்லா சீஸ் (mozzarella cheese)
ஃபிட்ட சீஸ் (feta cheese)
கொத்தமல்லி - சிறிது

செய்முறை

மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும்.மாவுடன் உப்பு,சீனி,பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பின் அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி அத்துடன் ஆயில் சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 4 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் கட் செய்த மொற்சரில்லா சீஸ்,உதிர்த்த ஃபிட்ட சீஸ்,பொடியாக வெட்டிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

பின் மாவை நான்கில் ஒரு பங்கை எடுத்து உருட்டி அதனை சிறிது தடினமாக சப்பாத்தி கட்டையால் பெரிதாக தேய்த்து,அதன்பின் தேய்த்த மாவின் மேல் ஒரு மூடியை வைத்து கத்தியால் ரவுன்டாக வெட்டி கொள்ளவும்.

மாவின் நடுவில் கால் டீஸ்பூன் ஆயில் விடவும்.

அதன்மேல் ஒரு தேக்கரண்டி சீஸ் கலவையை வைத்து,சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஓரம் முழுவதும் தடவும்.

பின் படத்தில் இருப்பது போல் இருபுறமும் மடக்கிவிடவும்.

அதேபோல் அடுத்தபுறமும் மடக்கிவிட்டால் இதுமாதிரி சதுரவடிவில் பைபோல் கிடைக்கும்.

பின்னர் அதனை ஆயில் தடவிய ட்ரேயில் வைத்து 325 டிகிரி முற்ச்சூடு செய்த்த ஓவனில் 15 அல்லது 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான ஸ்டப்டு சீஸ் பை ரெடி.

இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லன்ஞ்க்கு ஏற்றது.

ப்ரிஜரில் வைத்து வேண்டும்பொழுது மைக்ரோ ஓவனில் சூடு செய்தும் கொடுக்களாம்.மிகவும் சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இதில் பேக்கிங் பவுடர் சேர்த்து இருப்பதால் சீக்கிரமாக கீழ்பகுதி கறுகிபோய்விடும்.அதனால் அவ்வபொழுது கீழே கறுகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

7 comments:

Mahi said...

Pie looks yummy n cute!

Jaleela Kamal said...

மாவு திரட்டி வைத்திருப்பது பார்க்கவே அழகாக இருக்கு
குழந்தைகளுக்கு பிடிச்ச ரெசிபியும்

Asiya Omar said...

வாவ்!அருமையாக செய்து காட்டிருக்கீங்க யாஸ்மின்.

Yasmin said...

மகி.....மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.

ஜலிலா....மிக்க நன்றி.குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும்.செய்து பார்த்து சொல்லுங்க.

ஆசியா அக்கா....வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

Mahi said...

/அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க./ஆஹா..போட்டீங்களே ஒரு போடு! ;)))) நான் இந்த சீஸ் பக்கமெல்லாம் போவதே இல்லைங்க. எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. நீங்க செய்திருப்பது அழகா இருக்கு, ஒரே ஒரு ஸ்மால் பீஸ் தந்தீங்கன்னா டேஸ்ட் பண்ண ட்ரைபண்ணுவேன்,தட்ஸ் ஆல்! ஹி..ஹி..

chitrasundar5 said...

யாஸ்மின்,
அழகா செஞ்சி காட்டியிருக்கீங்க.குட்டிக்குட்டியாக,அழகழகாக, அப்படியே எடுத்து சாப்பிடலாம் போல உள்ளது.

Yasmin said...

சித்ராசுந்தர்,உங்களுக்கு பிடிச்சது கூடுதல் சந்தோசம்.மிக்க நன்றி.