Showing posts with label குழம்பு / Gravy. Show all posts
Showing posts with label குழம்பு / Gravy. Show all posts
Sunday, February 12, 2012
பனீர் டிக்கா மசாலா / Paneer Tikka Masala
தேவையானவை
பனீர் - 1 கப் ( பொரித்தது )
பெரிய வெங்காயம் - 1 ( விழுதாக )
தக்காளி - 2 ( விழுதாக )
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டாணி - சிறிது
கசூரி மேத்தி பவுடர் - 1 தேக்கரண்டி
தந்தூரி மசாலா பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
பால் - 1 1/2 கப்
சீனி - 1 /4 ஸ்பூன்
சாய் சீரா - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை
வாணலியில் 3 தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சாய் சீரா மற்றும் சிறிது கசூரி மேத்தி சேர்த்து தாளிக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.அதனுடன் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் தந்தூரி மசாலா பவுடர் சேர்த்து வதக்கி,
தக்காளி விழுது,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் பட்டாணி சேர்த்து கிளறவும்.
பின் பால் 1 1/2 கப் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்திருக்கும் பனீர் துண்டுகளை போட்டு வேகவிடவும்.
சிறிது வெந்தவுடன் 1/4 ஸ்பூன் சீனி சேர்க்கவும்.நன்கு கொதித்து எண்ணெய் மேலே வந்தவுடன் கசூரி மேத்தி பவுடர் தூவி இறக்கவும்.
நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான சைட் டிஷ்.
Tuesday, December 27, 2011
மீன் குழம்பு / Fish Gravy
தேவையானவை
மீன் - அரை கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1 பல்
பச்சைமிளகாய் - 2
மிளகாய்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிபொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு,சீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,மிளகாய்பொடி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் ஒரு கரண்டி அளவு வதங்கியதை எடுத்து மிக்சியில் போட்டு அத்துடன் மல்லிபொடி சேர்த்து நைசாக அரைக்கவும்.
நன்கு வதங்கிய தக்காளி,வெங்காயத்துடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா,புளி வாடை அடங்கியவுடன் மீனை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
Saturday, October 15, 2011
அரைத்துவிட்ட சாம்பார் / Arachu vitta Sambar
தேவையானவை
துவரம்பருப்பு - 1 கப் ( வேகவைத்தது)
வறுத்து அரைக்க
வரமிளகாய் - 4
சீரகம் - அரை ஸ்பூன்
மல்லி - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்
கத்தரிக்காய் - 2
கேரட் - 1
தக்காளி - 2 சிறிது
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
தேங்காய் - ஒரு சில்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
அரைக்க கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
பின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பாதி,ஒரு தக்காளி சேர்த்து வதக்கி ஆறியவுடன் அரைத்த பொடியுடன் தேங்காய் ஒரு சில் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் வேகவைத்த துவரம்பருப்புடன் பொடியாக வெட்டிய காய்கறிகள்,பாதி வெங்காயம்,தக்காளி,புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி அரைத்த விழுது சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
இறக்கும் போதும் சிறிது கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சுவையான அரைத்துவிட்ட சாம்பார் தயார்.
Subscribe to:
Posts (Atom)















