Thursday, April 26, 2012

ஆலு கேப்ஸிகம் மசாலா / Aalu Capsicum Masala

தேவையானவை

 குடைமிளகாய் - 2
 வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
 வெங்காயம் - 1
 தக்காளி - 2
 மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
 கறிபொடி - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
 கடுகு - 1/4 ஸ்பூன்
 கருவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 அரைக்க
 தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
 வேர்க்கடலை - ஒருகை
 காய்ந்த மிளகாய் - 3
 சீரகம் - ஒரு தேக்கரண்டி

 செய்முறை

 தேவையான பொருட்களை முதலில் எடுத்து வைக்கவும்.
அரைக்க வேண்டியதை அரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் மிளகாய் தூள்,கறிபொடி போட்டு
பின் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியவுடன்
வெட்டிய குடைமிளகாய்,வேகவைத்த உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து கிளறி மூடிபோட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து
பின் அத்துடன் 1 கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
கிரேவி சற்று கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.சுவையான ஆலு கேப்ஸிகம் மசாலா தயார்.
இது சப்பாத்தி,பூரிக்கு சுவையான சைட் டிஷ்.

9 comments:

Mahi said...

Looks yummy with oil oozing out! :P

Yasmin said...

Thanks for your valuable feedback!Mahi

chitrasundar5 said...

யாஸ்மின்,

கறிபொடி என்றால் சாம்பார் பொடியா?நான் வேர்க்கடலை சேர்த்து செய்ததில்லை நல்லா அழகா செஞ்சி காட்டியிருக்கீங்க.படங்கள் கலர்ஃபுல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

சூப்பர்.செய்து பார்க்கிறேன் யாஸ்மின்.

Yasmin said...

சித்ரா சுந்தர்,உங்கள் வருகைக்கு மிக்க நன்றி........கறிபொடி என்றால் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு இன்னும் சில, சேர்த்து அரைத்த பொடி. இந்த பொடி எல்லா மட்டன், சிக்கன்,இரால்,நண்டு குழம்புகளுக்கும் உபயோகிக்கலாம். குழம்பு நன்கு சுவையாக இருக்கும்.

Yasmin said...

ஆசியாக்கா,செய்து பாருங்க ..வாழ்த்திற்கும்,பதிவிற்கும் நன்றி....

LBhairavi said...

யாஸ்மின்
o my god to type this one tamil word it took 20 min ,I don't know how you type all this words in tamil your great யாஸ்மின் and all your dishes too.

Yasmin said...

Thank You akka.

Mahi said...

யாஸ்மின், உங்க ரெசிப்பிய செய்து சாப்பிட்டோம், சூப்பரா இருந்தது. ஊரிலிருந்து வந்ததும் என் வலைப்பூ பக்கம் வந்து பாருங்க. :)