Sunday, February 19, 2012

பால்கோவா / Palgova



தேவையானவை

ரிக்கட்டா சீஸ் (ricotta cheese) - 14 oz
பட்டர் - 4 டேபுள் ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பால் பவுடர் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 பின்ச்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.


ஒரு கடாயில் பட்டரை போட்டு லேசாக உருக்கியவுடன்

ரிக்கட்டா சீஸ்,சர்க்கரை சேர்த்து

ஒரு கரண்டியால் கட்டி இல்லாமல் கிளறவும்.

பின் கொதிக்க ஆரம்பித்தவுடன் கை விடாமல் 15 நிமிடம் கிளறவும்.

முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.

பிறகு கொஞ்சம் கெட்டியாக ஆனவுடன் பால் பவுடர் சேர்த்து

நன்றாக கலந்து மீண்டும் ஒரு 10 நிமிடம் கிளறவும்.

கடைசியில் ஏலக்காய் பொடிதூவி

பாத்திரத்தில் ஒட்டாமல் பால்கோவ பதம் வந்ததும் இறக்கவும்.

இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.

5 comments:

Asiya Omar said...

அருமையாக இருக்கு யாஸ்மின்.

Yasmin said...

வாழ்த்துக்கு நன்றி...

சித்ராசுந்தர் said...

Yasmin,
ஸ்டெப் பை ஸ்டெப்பா விளக்கமா சொல்லியிருக்கீங்க.நல்லாருக்கு.ஒரு நாள் செய்திடவேண்டியதுதான்.பிடித்தமான ஸ்வீட்டும்கூட.

Yasmin said...

வாழ்த்துக்கு நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.