Friday, April 29, 2011

திரமிசு கேக் / Tiramisu Cake


கேக் செய்ய தேவையானவை

ஓய்ட் கேக் மிக்ஸ் - 1 பாக்ஸ்
ஸ்ட்ராங் காஃபி - 1 கப்
முட்டை வெள்ளை கரு - 3


க்ரீம் செய்ய தேவையானவை

சீனி - 1/2 கப்
கோக்கொ ப்வுடர் - 2 தேக்கரண்டி
க்ரீம் சீஸ் - 8 oz
விப் க்ரீம் - 8 oz
வென்னில எஸ்சன்ஸ் - 2 ஸ்பூன்
ஸ்ட்ராங் காஃபி - 1/2 கப்

செய்முறை

முட்டையின் வெள்ளை கருவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் காஃபி ஒரு கப் சேர்த்து பீட்டர் அல்லது முட்டையை அடிக்க உதவும் கரண்டி கொண்டு நன்கு அடித்து கொள்ளவும், நுரை வரும் வரை நன்றாக அடிக்கவும்.பின் மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு கலக்கவும்.
கேக் செய்ய வேண்டிய பாத்திரத்தில், உட்பகுதியில் வெண்ணெய் அல்லது நெய் தடவி அதன் மேல் மைதா மாவை தூவவும்
பின்னர் கேக் ட்ரேயில் ஊற்றி
அவனில் 350 டிகிரில் வேக வைத்து எடுக்கவும்.
பேக் செய்த கேக் நன்றாக ஆறிய பின்பு மேல் பகுதி, கீழ் பகுதி என்று இரண்டு பகுதியாக கட் பண்ணவும்.

க்ரீம் செய்முறை

சீனி,கோக்கொ ப்வுடர்,க்ரீம் சீஸ்,விப் க்ரீம்,வென்னில எஸ்சன்ஸ்
எல்லாவற்றையும் சேர்த்து பீட்டரால் நன்கு க்ரீமாகும் வரை அடிக்கவும்.
ஒரு பகுதி கேக் மேல் காஃபி தண்ணீர் தெளித்து அதன்மேல் செய்த க்ரீமை பரத்தி வைக்கவும்,அதன் மேல் இன்னொரு பகுதி கேக் வைத்து,மறுபடியும் காஃபி தண்ணீர் தெளித்து க்ரீமை பரத்தவும்.கடைசியில் மீதம் இருக்கும் க்ரீமை தடவி கோக்கோ ப்வுடர் தூவி விடவும்.
இதைஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்
பின் எடுத்து கத்தியால் வெட்டி பறிமாறவும்

No comments: