Sunday, November 27, 2011

சிக்கன் கிரேவி / Chicken Gravy



தேவையானவை

சிக்கன் - அரைக் கிலோ

தாளிக்க தேவையான பொருட்கள்:

பட்டை - 2 துண்டு
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்கவும்:

வர மிளகாய் - 4
பட்டை - 2 துண்டு
மல்லி - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 4 பல்
வெங்காயம் - 1/2
தேங்காய் - 1/2 கப்

செய்முறை

கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,வரமிளகாய்,மல்லி,சோம்பு,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கடைசியில் தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,சீரகம்,வெந்தயம்,வெந்தயம்,வெங்காயம்,பச்சைமிளகாய்,
தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


நண்றாக வதங்கியவுடன் சிக்கன்,உப்பு சேர்த்து

அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி

ஐந்து நிமிடம் வதக்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


தேவைபட்டால் கோழி பாதியளவுக்கு வெந்ததும் உருளைக்கிழங்கு,காலிஃப்ளவர் சேர்த்து கொள்ளவும்.


குழம்பு கொதித்து கோழி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

சூடான சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட சூடான சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

Friday, November 25, 2011

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala



தேவையானவை

எலும்பில்லா சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
முட்டை வெள்ளைகரு - 1
எண்ணெய் - பொரிக்க
சிக்கன் 65 மசால (அ) மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
மிளகுசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
தயிர் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1/2
குடைமிளகாய் - 1/2

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர்,இஞ்சி பூண்டு விழுது,ரெட் கலர்,உப்பு,கார்ன் ஃப்ளார்,முட்டை வெள்ளைகரு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.


கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் விட்டு ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக இருபுறமும் வறுத்து எடுக்கவும்.

குறைந்தது 15 நிமிடத்தில் சிக்கன் வெந்துவிடும்.
அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.


மற்றொரு பாத்திரத்தில் தயிர், ரெட் கலர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்.


பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து

கரைத்து வைத்துள்ள தயிர் கலவையினை சேர்க்கவும்.


பின்னர் வறுத்து வைத்த சிக்கன்

,வதக்கின வெங்காயம்,குடைமிளகாய் சேர்த்து

5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.
சுவையான ஹைதராபாத் சிக்கன் 65 ரெடி.

Sunday, November 6, 2011

வேர்கடலை சிக்கி / Peanut chikki



தேவையானவை

வேர்கடலை - ஒரு கப்
சர்க்கரை - 3/4 கப்

செய்முறை

வேர்கடலையை வறுத்து தோல் எடுத்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் சர்க்கரையை சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது.
முதலில் சர்க்கரை கட்டிகளாக மாறும்.

கரண்டியால் கைவிடாமல் கிளறவும்.பின் சர்க்கரை பொன்னிறமாக முழுதும் கரைந்ததும்,

வேர்க்கடலை பொடியை போட்டு கலந்து

உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி நெய் தடவிய சப்பாத்தி கடையால் தேய்த்து

உடனே துண்டுகள் போடவும்.


மொறுமொறுப்பான சுவையான வேர்கடலை சிக்கி தயார்.

குழிப்பணியாரம் / Kuli Paniyaram



தேவையானவை

இட்லி மாவு - ஒரு கப்
ஏலக்காய் - 1 (விதை மட்டும்)
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
வெல்லம் - 1/3 கப்
ஆப்பசோடா - சிறிது
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.மைக்ரோஒவனிலும் ஒரு நிமிடம் வைத்தும் செய்யலாம்.
இறக்கி வைத்து வடிகட்டி மாவில் ஊற்றி அதனுடன் தேங்காய் துருவல்,பொடித்த ஏலக்காய், ஆப்பசோடா, சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும்.

சிவந்து வெந்ததும் எடுக்கவும்.


சூடான சுவையான குழிப்பணியாரம் ரெடி.

Saturday, November 5, 2011

பாதுஷா / Badusha



தேவையானவை

மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
தயிர் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய

சர்க்கரை - 1 1/4 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

மைதா மாவுடன் உப்பு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கி வெண்ணெய் சேர்த்து பிசைந்து பின் தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


அரை மணி நேரம் மாவை மூடி வைக்கவும்.இதனிடையில் சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி இறக்கும்பொழுது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்..

மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓரங்களை விரள்கலால் மடித்து
பாதுஷா போல் செய்து கொள்ளவும்.

எண்ணெயை சூடானதும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.பின் பாதுஷாக்களை எண்ணெயில் போடவும்.வெண்ணிறமாய் பாதுஷாக்கள் மேலே வந்து மிதக்க ஆரம்பித்த பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்.

பொன்னிறமாக பொரித்து எடுத்து,ஆறிய பின் பாகில் போடவும்.


2 நிமிடம் ஊறிய பின் எடுத்து, பரிமாறவும்.

Saturday, October 15, 2011

அரைத்துவிட்ட சாம்பார் / Arachu vitta Sambar



தேவையானவை

துவரம்பருப்பு - 1 கப் ( வேகவைத்தது)

வறுத்து அரைக்க

வரமிளகாய் - 4
சீரகம் - அரை ஸ்பூன்
மல்லி - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

கத்தரிக்காய் - 2
கேரட் - 1
தக்காளி - 2 சிறிது
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிது
தேங்காய் - ஒரு சில்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை

அரைக்க கொடுத்தவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
பின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பாதி,ஒரு தக்காளி சேர்த்து வதக்கி ஆறியவுடன் அரைத்த பொடியுடன் தேங்காய் ஒரு சில் சேர்த்து மறுபடியும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் வேகவைத்த துவரம்பருப்புடன் பொடியாக வெட்டிய காய்கறிகள்,பாதி வெங்காயம்,தக்காளி,புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி அரைத்த விழுது சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
இறக்கும் போதும் சிறிது கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சுவையான அரைத்துவிட்ட சாம்பார் தயார்.

Friday, October 14, 2011

பருப்பு பொடி / Paruppu Podi



தேவையானவை

கடலை பருப்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் - 5 அல்லது 8
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 1 பல்
செய்முறை

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.


நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் உப்பு சேர்த்து நைஸாக பொடியாக்கவும்.


சுவையான பருப்பு பொடி தயார்.வெறும் சாதத்தில் கூட நெய் விட்டு சாப்பிடலாம்.

Thursday, September 1, 2011

காஜூ கத்திரி / Kaju Katri



தேவையனவை

முந்திரி - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - 3 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை

ஏலக்காய் முந்திரி பருப்பு இரண்டையும் மிக்சியில் நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர்,பால் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரி பருப்பை சேர்த்து நன்கு ஒன்று சேர கட்டியில்லாமல் கிளறவும்.
கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்றவும்.
ஒரு பத்து நிமிடம் நன்கு சுருண்டு வரும் பதம் வரை கிளறவும்.
நன்கு கெட்டியான பிறகு பின்னர் நெய் தடவிய தட்டில் சூடாக கொட்டி விரும்பிய வடிவில் வெட்டவும். இதன் மேல் சில்வர் தாள் கொண்டு அலங்கரித்தால் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும்.

Saturday, July 30, 2011

கறி மசாலா பொடி / Curry Powder



தேவையானவை

ஜீரகம் - 300 கிராம்
சோம்பு - 150 கிராம்
மிளகு - 25(அ) 50 கிராம்
மஞ்சள் - 150 கிராம்
பட்டை - ஒரு கை அளவு
ஏலக்காய் - 20
கிராம்பு - 10

செய்முறை

அனைத்தையும் சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து மிஷினில் அல்லது மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
இந்த பொடி எல்லா மட்டன், சிக்கன்,இரால்,நண்டு குழம்புகளுக்கும் உபயோகிக்கலாம். குழம்பு நன்கு சுவையாக இருக்கும்.

Saturday, June 11, 2011

சிப்பட்டா ப்ரெட் / Ciabatta Bread



தேவையானவை

unbleached மைதா (அ) ப்ரெட் ப்ளொர் - 4 கப்
ஆலீவ் ஒயில் (அ) வெஜிடபிள் ஒயில் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 (அ) 2 1/2 கப்
சீனி - 1/2 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1/4 ஸ்பூன்

செய்முறை

மாவுடன் உப்பு,ஒயில் 2 மேசைக்கரண்டி,சீனி,ஈஸ்ட் சேர்த்து கலந்து வைக்கவும்.


பின் அதில் தண்ணீர் கலந்து சிறிது இலகுவாக கரண்டியால் பிசைந்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 8 அல்லது 10 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும்.
இப்பொழுது மாவு இரு மடங்காக பொங்கி இருக்கும்.

இந்த மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை மென்மையாக பிசைந்துக் கொள்ளவும்.


பின் பிசைந்த மாவை எடுத்து சிறிது மாவு சேர்த்து முற்சூடுப்படுத்திய அவனில் 400 F 20 - 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.


சுவையான சிப்பட்டா ப்ரெட் ரெடி.

இதற்க்கு கார்லிக் சாஸ்,ஒலிவ் ஒயில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கார்லிக் சாஸ் / Garlic Sauce



தேவையானவை

முழு பூண்டு - 3
லெமன் ஜுஸ் - 1/2 கப்
ஆலீவ் ஒயில் (அ) வெஜிடபிள் ஒயில் - 1 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை

மிக்ஸியில் தோல் உரித்த பூண்டு,லெமன் ஜுஸ்,உப்பு சேர்த்து அரைக்கவும்.

சிறிது அரைந்ததும் எண்ணெய் சேர்த்து நன்றாக நுரை வரும் வரை மைபோல் அரைத்து எடுக்கவும்.


இதனை குப்பூஸ்,பிரெட் வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ஃப்ரிஜில் வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்களாம்.
ஃப்ரீசரில் (freezer) வைத்தாலும் இலகுவாக இருக்கும்.